பக்கங்கள்

பக்கங்கள்

22 நவ., 2013

இலங்கைக் கவிஞர் ஜெயபாலன் மாங்குளத்தில் வைத்து கைது
இலங்கைக் கவிஞரும், நடிகருமான வா.ஐ.ச ஜெயபாலன் இலங்கையில் மாங்குளம் பகுதியில் வைத்து இன்று மாலை 5 மணியளவில்  கைது செய்யப்பட்டதாக இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரி தெரிவித்தார்.
கவிஞர் ஜெயபாலன் வீசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் துறைக்காகப் பேசவல்ல அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாங்குளத்திலுள்ள தனது தாயாரின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்றபோதே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு வவுனியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டமை தொடர்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
சுற்றுலா வீசாவில் வந்திருந்த ஜெயபாலன், இலங்கையில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ரோஹண தெரிவித்தார்.
அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்றும், அடுத்த கட்ட ந