பக்கங்கள்

பக்கங்கள்

8 நவ., 2013




            காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே என்ற கோரிக்கை, கடந்த பல வாரங்களாகவே, தமிழகத்தில் சூட்டைக் கிளப்பிவருகிறது! 

கடந்தவாரத்தில், சென்னையிலும் சேலத்திலும் மத்திய அரசு அலுவலகங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப் பட்டன. இது தொடர்பாக, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி உள்பட அந்த அமைப்பைச் சேர்ந்த 8 பேரை கைதுசெய்துள்ளது, போலீஸ். 

சேலம் வருமானவரித் துறை அலுவலகத்தில் கடந்த மாதம் 30-ம் தேதியன்று அதிகாலையில், சாக்குப்பை ஒன்று எரிக்கப் பட்ட நிலையில் கிடந்துள்ளது. அத்துடன், இரண்டாவது நுழை வாயில் அருகில் இருந்த விளக்கும் உடைக்கப்பட்டு இருந்தது. அங்கு பாதுகாவல் பணியில் இருக்கும் பாலசுப்ரமணியம், இருசக்கர வாகனங்களில் நான்கு பேர் இதைச் செய்ததைப் பார்த்தார் என்கிறது போலீஸ் தரப்பு. 

இது குறித்து வழக்குப்பதிவு செய்த சேலம் அஸ்தம்பட்டி போலீசார், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத் தூர் மணியிடமும் உள்ளூர் தி.வி.க. அமைப்பினரிடமும் விசாரித் தனர். அந்த சம்பவத்துக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று தி.வி.க. தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர். அதன்    பிறகு, என்ன நடந்ததோ, கொளத்தூர் மணி மீதும் தி.வி.க.வைச் சேர்ந்த மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைதும் செய்தது, போலீஸ். 

சேலம் சிறையில் மணியை சந்தித்த வைகோ பின் பத்திரிகையாளர்களிடம் ""ஈழத்தமிழர்கள் மீது உண்மையான ஆதரவு அ.தி.மு.க. அரசுக்கு கிடையாது. மக்களை ஏமாற்ற சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டனர். 

இந்த அடக்குமுறைகள் எங்கள் கால் தூசு'' என்று கொந்தளித்தார். இதற்கிடையே சேலம் செய்தியாளர்கள் யார் யாரோடு பேசினார்கள் என்று லிஸ்ட் எடுத்து போனில் மிரட்ட, பத்திரிகையாளர்கள் கொதித்துவிட்டனர்.  

முன்னதாக, சென்னை மயிலாப்பூரில் அஞ்சலகம் மீது எரியச் செய்யும் பொருட்களை வீசியதாக, தி.வி.க.வினர் நால்வர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரனிடம் கேட்டதற்கு, ""சேலம் சம்ப வத்தின்போது, சென்னை பல் கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்த தலைவர் கொளத்தூர் மணி மீது, சம்பந்தமே இல்லாமல் வழக்குப் பதிந்ததும் தோழர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்ததும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனினும் இதை தமிழக அரசுக்கு எதிரானதாக கொண்டு செல்ல விரும்பவில்லை. எங்களின் இலக்கு இலங்கை அரசுதான்'' என்கிறார். nanry nakkeran