பக்கங்கள்

பக்கங்கள்

27 நவ., 2013

இடிந்தரையில் நாட்டு வெடிகுண்டு வெடித்து வீடு தரைமட்டம்! 5 பேர் பலி! போலீசார் விசாரணை
நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் உள்ள சுனாமி காலணியில் செவ்வாய்க்கிழமை மாலை திடீர் வெடி விபத்து ஏற்பட்டதாகவும், வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள்
வெடித்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.


குண்டு வைத்திருந்த வீடு இடிந்து தரைமட்டம் ஆனது. மேலும் ஒரு வீடு தரைமட்டமானது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். வெடி விபத்து ஏற்பட்ட வீட்டில் கூத்தங்குளியைச் சேர்ந்த 6 பேர் கடந்த இரண்டு மாதங்களாக தங்கியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.