பக்கங்கள்

பக்கங்கள்

2 நவ., 2013

வெகு சிறப்பாக நடைபெற்ற சுவிஸ் எழுகை அமைப்பின் இரண்டாவது ஆண்டுவிழா
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் துயர்துடைக்கும் பணியில் பங்கெடுக்கும் நோக்குடன் சுவிஸ் நாட்டில் செயற்படும் ஆன்மீக, கலை, பண்பாட்டு, சமூக நிறுவனங்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட எழுகை நிறுவனத்தின் இரண்டாவது ஆண்டுவிழா
அண்மையில் சொலத்தூண் மாநிலத்தில் நடைபெற்றது.
மங்கள விளக்கேற்றல், பொதுச்சுடர் ஏற்றல் மற்றும் அகவணக்கம் என்பவற்றுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் முனைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் பிரதம விருந்தினராகவும், கவிஞர் தா. பாலகணேசன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மங்கள இசை, கர்நாடக இசை, மெல்லிசை, பரத நாட்டியம், மேற்கத்தேய நடனம், நாடகம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
2012 ஜனவரி மாதத்தில் உதயமான எழுகை அமைப்பு குறுகிய காலத்திலேயே தாயகத்தில் பல்வேறு உதவிப் பணிகளைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.