பக்கங்கள்

பக்கங்கள்

18 நவ., 2013

சுற்றலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடர் சமநிலையில் நிறைவு பெற்றது.
தம்புள்ளை ரங்கிரிய விளையாட்டு மைதானத்தில்  நேற்று இடம்பெற்ற மூன்றாவது போட்டி மழை காரணமாக இடைக்கிடையே பாதிப்புக்கு உள்ளானது.
 
இந்த நிலையில், போட்டி 33 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
 
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 33 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 211 ஓட்டங்களை பெற்றது.
 
இந்த நிலையில் பதிலுக்கு ஆடிய நியூசிலாந்து அணி 25 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 126 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது.
 
இதனை அடுத்து டக்வத் லூயிஸ் முறைப்படி 36 ஓட்டங்களால் இலங்கை இந்த போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
 
ஏற்கனவே இடம்பெற்ற போட்டிகளில் ஒரு போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிப்பெற்றிருந்த நிலையில் பிறிதொரு போட்டி மழையினால் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.