பக்கங்கள்

பக்கங்கள்

2 நவ., 2013

ஒபாமா மனைவிக்கு பயம்! மன்மோகன் ஜெயலலிதாவிற்கு பயம்!- ஹெல உறுமய ஏளனம்!
அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா மனைவிக்கு பயம், இந்திய பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பயம் என இலங்கை ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய ஏளனம் செய்துள்ளது.
தனது மனைவிக்கு அஞ்சி ஜனாதிபதி ஒபாமா ஆறு ஆண்டுகள் புகைப்பிடிக்கவில்லை என அண்மையில் தெரிவித்திருந்தார் என ஜாதி ஹெல உறுமய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எனினும், இந்திய பிரதமர் மன்மோகன் சிங், கீழ் வீட்டு அம்மையார் அதாவது ஜெயலலிதாவிற்கு பயந்து செயற்படுகின்றார்.
ஜெயலலிதாவின் உத்தரவுகளுக்கு அமையவே மன்மோகன் சிங் செயற்படுகின்றார்.
இதனால், இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் அமர்வுகளில் இந்திய பிரதமர் மன்மோகன் பங்கேற்கும் வரையில் நிச்சயமில்லை என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
லயனல் வென்ட் அரங்கில் நடைபெற்று வரும் நெசவுக் கைத்தொழில் குறித்த கண்காட்சி ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.