பக்கங்கள்

பக்கங்கள்

2 நவ., 2013

காதலியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய காதலன் தற்கொலை.

இரத்தினபுரி - இரக்குவானை பகுதியில் காதலன் காதலி இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக காதலன் காதலியை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இரக்குவானை - தெனியாய வீதியில் உள்ள 17 வயதுடைய காதலியின் வீட்டுக்கு தெரணியகல - மீயனவிட்ட பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய காதலன் சென்றுள்ளார். இதன்போது இருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட காதலியை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
 
இதன்போது படுகாயமடைந்த குறித்தப் பெண் காவத்தை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் இரக்குவானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.