பக்கங்கள்

பக்கங்கள்

26 நவ., 2013

மன்னாரில் பறக்கவிடப்பட்ட புலிக்கொடியால் பெரும் பரபரப்பு: கடும் சோதனை நடவடிக்கையில் இராணுவத்தினர்
மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின், தேசிய கொடி ஏற்றப்பட்ட சம்பவத்தினைத் தொடர்ந்து அப்பகுதியில் கடும் பதற்றமும் சோதனை நடவடிக்கைளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் பனங்கட்டிக்கொட்டு – எமிழ் நகர் கிராமத்தில் உள்ள டவர் ஒன்றில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியக்கொடியான 'புலிக்கொடி' ஏற்றப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு கடும் சோதனை நடவடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்தோடு இந்த செய்தி காரணமாக மக்கள் மத்தியில் கடும் அச்சமும் எந்நேரமும் எதுவும் நடைபெறலாம் என்ற பீதியும் ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் அவ்வாறு எந்தவிதமான சம்பவமும் இடம்பெறவில்லையென்று மன்னார் பொலிஸார் அறிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.