பக்கங்கள்

பக்கங்கள்

14 நவ., 2013

மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு மறைக்க முயற்சி ; சர்வதேச மன்னிப்பு சபை
பொது சமூகத்தில் காணப்படுகின்ற அச்சுறுத்தல்களை நீக்கி அதனை முடிவுக்கு கொண்டு வர பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.


நேற்று கொழும்பில் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பான நிகழ்வுக்கு வருகைதந்த காணாமல் போனோரின் உறவுகளை இராணுவத்தினர் மதவாச்சியில் வைத்து திருப்பியனுப்பியுள்ளனர்.பேச்சு சுதந்திரத்தை கொண்டுள்ள பொதுநலவாயத்தின் கொள்கைக்கு மாறான செயலாகவே இதனைக்கருத முடியும்.

குடியியல் சமூகத்தின் உரிமைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக பாதித்துவருவதற்கு இது ஒன்று சான்றாகும் என்று பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கும் சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச்செயலாளரின் அலுவலக பணிப்பாளர் ஸ்டிவ் க்ராவ்சோவ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் பொதுநலவாய மாநாட்டை பயன்படுத்தி தம்மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு வெள்ளையடித்துக்கொள்ள இலங்கை முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் அனுமதிக்கக்கூடாது என்றும் ஸ்டீவ் கோரியுள்ளார்.