பக்கங்கள்

பக்கங்கள்

15 நவ., 2013

சூடுபிடிக்கும் பொதுநலவாய விவகாரம்: வட அமெரிக்காவில் தமிழர்கள் போராட்டம்
பொதுநலவாய மாநாட்டு விவகாரத்தில் சிறிலங்கா அனைத்துலக அரங்கில் விவாதப்பொருளாக மாறியுள்ள சமகாலத்தில், அதனையொட்டிய மக்கள் போராட்டங்கள் தாயகத்திலும் வெளியிலும் இடம்பெற்று வருகின்றன.
இதனொரு அங்கமாக அமெரிக்காவிலும், கனடாவிலும் போராட்டங்கள் இடம்பெறுகின்றன.
தமிழர் தாயகத்தின் வலிகாமம் மக்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டத்துக்கு தோழமையினைத் தெரிவிக்கும் பொருட்டு கனேடிய தமிழர் அமைப்புக்களின் கூட்டிணைவில் போராட்டமொன்று இன்று இடம்பெறுகின்றது.
பொதுநலவாயத்தின் சிறிலங்கா மாநாட்டினை கண்டித்தும், இராணுவமயப்படுத்தல், இனஅழிப்பு, நிலஅபகரிப்பு, காணாமல்போனவர் விவகாரம், தமிழ்ச்சிறைகள் மற்றும் பெண்களிற்கு எதிரான பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி அனைத்துலக விசாரணைக்கான கோரிக்கையுடன் இப்போராட்டத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி ஏலவே அழைப்பு விடுத்திருந்தார்.
இதன்தொடர்சியாக வெள்ளிக்கிழமை நியூயோர்க்கில் உள்ள ஐ.நா முன்றலிலும் இக்கோரிக்கையுடன் அமெரிக்கத் தமிழர்கள் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.
நாளை மதியம் 11 மணி முதல் 2 மணி வரை இப்போராட்டம் இடம்பெறவுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி சான் சுந்தரம் அவர்கள், அமெரிக்காவின் பல்வேறு தமிழர் அமைப்புக்கள் கூட்டாக இதனை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.