பக்கங்கள்

பக்கங்கள்

5 நவ., 2013

ஈழ ஆதரவு போல அதிமுக ரெட்டை வேடம் போடுகிறது :
வைகோ ஆவேசம் 

 நள்ளிரவில் கைது செய்யப்பட்ட கொளத்தூர் மணியை சேலம் சிறையில் கொட்டும் மழையில் சந்தித்தார் வைகோ.

நீண்ட நேரத்திற்கு பின் திரும்பியவர் வெளியில் இருந்த செய்தியாளர்களிடம், “எதேச்சதிகார நடவடிக்கை இது. கொளத்தூர்
மணி மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். ஈழ ஆதரவை மிரட்ட நினைத்ததற்கான சாட்சியமே கொளத்தூர் மணி உட்பட்ட மூவர் கைது ஆகும்.  இது அ.தி.மு.க அரசின் அராஜகமாகும்.  அடக்கு முறையை ஏவியுள்ளது.


ஒரு பக்கம் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிவிட்டு மறுப்பக்கம் காமன்வெல்த் இலங்கையில் நடப்பதை எதிர்க்கும் உணர்வாளர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்கின்றனர். இது நேர்முரணானது. ஈழ ஆதரவு போல அ.தி.மு.க ரெட்டை வேடம் போடுகிறது.


உணர்வாளர்களை அச்சுறுத்தல் செய்கிறது.  அ.தி.மு.க. உண்மையான உணர்வு கிடையாது.  இவர்களு க்கு ஈழ தமிழர்களுக்கு மீது உண்மையான ஆதரவு கிடையாது. மக்களை ஏமாற்ற தீர்மானம் போட்டனர்.
முத்துகுமார் தொட்டு இதே ஊரில் அருந்ததியர் சகோதரரான விஜய்ராஜ் வரை 19 பேர்கள் நெருப்பு இரையா கி வீரமரணம் அடைந்தனர்.  இவர்களுக்காக அ.தி.மு.க அந்தம்மா ஒரு இரங்கல் அறிக்கையாவது வெளியிட்டுள்ளதா?!
இந்த அடக்குமுறைகள் எங்களுக்கு கால் தூசு. அதேபோல மிஸ்டர் சிதம்பரம் ஈழ தமிழர்கள் மீதான படுகொலைகள் உங்களுக்கு முந்தாநாள் தான் தெரியுமா? திடீர் நீலி கண்ணீர் வடிகிரீர்! இசைபிரியாவை கொடூரமாக கூட்டு புணர்வு செய்து கொன்றுள்ளனர் சிங்கள வெறி ராணுவம். அது இப்போதுதான் சிதம்பரத்திற்கு தெரியுமா? இவ்ளோ நாள் கோமாவில் இருந்தாரா? மூனரை வருடம் முன்பே இந்தியா தந்த ஆயுதங்கள் ஆதரவு தான் இசைபிரியாவை கொன்றுள்ளது.
 காமன்வெல்த்தில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதல்ல காமன்வெல்த்தே இலங்கையில் நடக்க கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. இளைஞர்களே மாணவர்களே கிளர்ந்து எழுங்கள்..... இந்தியா ஏற்பாடு செய்ததே காமன்வெல்த். முத்துகுமார் விஜயராஜ் எரிந்த நெருப்பின் ஆணையாக மாணவர்களிடம் கேட்கி றேன்.... கிளர்ந்தெழுங்கள்’ என தோளை குலுக்கி ஆவேசமாக பேசிவிட்டு கிளம்பினார் வை.கோ.
- இளங்கோவன்