பக்கங்கள்

பக்கங்கள்

10 நவ., 2013

மாநாட்டில் கலந்து கொள்ள முடியாதது வருத்தமளிக்கின்றது! மகிந்த ராஜபக்சவுக்கு மன்மோகன் சிங் கடிதம்
கொழும்பில் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டில் தன்னால் கலந்து கொள்ள முடியாதது வருத்தமளிக்கின்றது என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை ஜனாதிபதி மகிந்த  ராஜபக்சவுக்கு கடிதம் எழுதியுள்ளார். .
இலங்கை தலைநகர் கொழும்பில் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் ஆகியவை மத்திய அரசை வலியுறுத்தின.
இதையடுத்து மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளவில்லை. மாறாக வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்கிறார்.
இந்நிலையில் மாநாட்டில் தன்னால் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்து பிரதமர் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்காததற்கான காரணங்களை விபரித்தும், அதில் பங்கேற்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்தும் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுநலவாய அமைப்பின் பெறுமானங்களைத் தாம் மதிப்பதாகவும், ஆனாலும், நிர்ப்பந்தங்களைக் கொடுக்கும் காரணிகளால் தன்னால் அதில் பங்கேற்க முடியவில்லை என்றும் இந்தக் கடிதத்தில் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
சண்டிகரில் தேர்தல் பரப்புரைக்காக சென்றிருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நேற்றிரவு புதுடெல்லி திரும்பியிருந்தார்.
பிரதமர் எழுதியுள்ள கடிதத்தை கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மகிந்த ராஜபக்சவிடம் அளிப்பார்கள் என்று தெரிய வந்துள்ளது.