பக்கங்கள்

பக்கங்கள்

5 நவ., 2013


காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க தடை கேட்ட வழக்கு தள்ளிவைப்பு
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



இதன் மீது மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என உத்தரவிட வேண்டும் என கேட்டும் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த வக்கீல் ராய்ஸ் இமானுவேல் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், வைத்தியநாதன் ஆகியோர் வழக்கு விசாரணையை 5–ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
அதன்படி இன்று காலை வழக்கு விசாரணை நடைபெற்றது. நீதிபதிகள் ஜெயச்சந்திரன், வைத்திய நாதன் ஆகியோர் வழக்கை விசாரித்து, விசாரணையை தள்ளி வைப்பதாக அறிவித்தனர். அவர்கள் இது குறித்து,   ‘’இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டில் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
என்ன காரணத்திற்காக அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி அறிய அந்த வழக்கின் ஆவணங்களை தாக்கல் செய்ய மத்திய–மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். அவை வந்தவுடன் ஆய்வு செய்து பின்னர் வழக்கு விசாரிக்கப்படும். அதுவரை இந்த வழக்கை தள்ளி வைக்கிறோம்’’என்று கூறப்பட்டுள்ளது.