பக்கங்கள்

பக்கங்கள்

6 நவ., 2013

யாழில் முத­லா­வது புற்­றரை மைதானம் அமைக்கும் பணிகள் யாழ்ப்­பாணம் சென்.பற்றிக்ஸ் கல்­லூரி மைதா­னத்தில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.
கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் யாழ்ப்­பாணம் வருகை தந்த இலங்கை தெரிவுக் குழுவின் தலைவர் சனத் ஜெய­சூ­ரிய, யாழில் முத­லா­வது புற்­றரை துடுப்­பாட்ட மைதானம் சென்.பற்றிக்ஸ் கல்­லூரி மைதா­னத்தில் அமைக்­கப்­படும் என தெரி­வித்­தி­ருந்தார்.


இந்­நி­லையில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை முதல் புற்­றரை மைதானம் அமைக்கும் பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

யாழ். மாவட்ட துடுப்­பாட்ட வீரர்கள், வெளி மாவட்­டங்­களில் போட்­டி­களில் கலந்­து­கொள்­வதில் புற்­றரை மைதானம் பெரும் பிரச்­சி­னை­யா­க­வி­ருந்­தது. ஏனெனில் யாழ்ப்­பா­ணத்தில் மற்றிங் (சாக்கு விரிப்பு) துடுப்­பாட்ட மைதா­னங்­களே இது­வரை காலமும் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­தன.

இதனால் யாழ்ப்­பா­ணத்தில் விளை­யாடிப் பழ­கிய யாழ். மாவட்ட துடுப்­பாட்ட வீரர்கள் புற்­றரை மைதா­னங்­களில் நடை­பெறும் போட்­டி­களில் பந்­து­வீச்­சா­ளர்கள் பந்­து­வீ­சு­வ­திலும், துடுப்­பாட்ட வீரர்கள் பந்துவீச்சுக்களை எதிர்கொள்வதிலும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தமை குறிப்பி டத்தக்கது.