ஆளுநர் உரையினை பகிஸ்கரித்து விட்டு வெளியேறிய உறுப்பினர்கள் மூவரும் விருந்தினர் அறையினுள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.அங்கு கருத்து வெளியிட்ட அனந்தி சசிதரன் தான் ஏற்கனவே கூறியவாறு சந்திரசிறி ஒரு போர்க்குற்றவாளி. அவர் யாழ்ப்பாணத்தினில் இராணுவத்தளபதியாகவிருந்த வேளையினிலேயே ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் காணாமல் போயிருந்தனர்.அதற்கு பதிலளிக்க வேண்டியவர்.
அது தவிர இவரை இணைப்பாளராக நியமித்த வேளையினிலேயே வவுனியா தடுப்பு முகாம்களினிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வடிகட்டப்பட்டு காணாமல் போகவும் செய்யப்பட்டிருந்தனர்.நடந்து முடிந்த தேர்தலினில் இந்த மக்களது வாக்கினைப்பெற்றுத்தான நாம் வெற்றி பெற்றோம்.இனி மௌனமாக இருக்க முடியாதென தெரிவித்தார்.
தேர்தலினில் இந்த மக்களது வாக்கினைப்பெற்றுத்தான நாம் வெற்றி பெற்றோம்.இனி மௌனமாக இருக்க முடியாதென தெரிவித்தார்.