பக்கங்கள்

பக்கங்கள்

9 நவ., 2013

நடிகை அஞ்சலி கைதாவாரா?:
 பிடிவாரண்ட் நகல் ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது
 தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வந்த  நடிகை அஞ்சலி, வளசரவாக்கத்தில் சித்தி பாரதிதேவியுடன் தங்கியிருந்து படப்பிடிப்புகளில் பங்கேற்றார். 



கடந்த ஏப்ரல் மாதம் வீட்டை விட்டு திடீரென வெளியேறிய அஞ்சலி, சென்னையில் உள்ள பத்திரிகை நிருபர்களை போனில் தொடர்பு கொண்டு பேசி, டைரக்டர் களஞ்சியம், சித்தி பாரதிதேவி ஆகியோர் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினார்.
இருவரும் சேர்ந்து என்னை அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள நினைக்கிறார்கள். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு களஞ்சியம்தான் பொறுப்பு என்றும் அஞ்சலி கூறியிருந்தார். இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த களஞ்சியம், அஞ்சலி மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்ததுடன், சைதாப்பேட்டை கோர்ட்டில் அவதூறு வழக்கும் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத அஞ்சலிக்கு கடந்த மாதம் 29–ந்தேதி ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நடிகை அஞ்சலி தற்போது ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஜெகனாப்பேட்டை என்ற இடத்தில் வசித்து வருகிறார். இந்த பகுதி, ராசுல் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டதாகும்.
இதையடுத்து, சைதாப்பேட்டை கோர்ட்டு பிறப்பித்த பிடிவாரண்டு நகல் ராசுல் போலீஸ் நிலையத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டைரக்டர் களஞ்சியத்தின் வக்கீல் ஜெயபிரகாஷ் இதனை தெரிவித் தார்.