பக்கங்கள்

பக்கங்கள்

21 நவ., 2013

போர்க்குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தவில்லை என்றால் ஜெனிவா செல்வேன்!- விக்ரமபாகு
இலங்கையில் போருக்கு பின்னர் காணாமல் போனவர்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக உரிய விசாரணைகளை நடத்தவில்லை என்றால் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டு அது பற்றிய விடயங்களை முன்வைக்க போவதாக கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
இலங்கையில் காணாமல் போனவர்களை தேடியறியும் குழுவின் உறுப்பினரான அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் இதுவரை உரிய விசாரணைகளை மேற்கொண்டு தமது அமைப்பு ஜெனிவா செல்வதை தவிர்க்க அரசாங்கத்திற்கு போதுமான கால அவகாசம் உள்ளது.
ஜெனிவா கூட்டத்தில் அரசியல் கட்சி ஒன்றின் தலைவராக கலந்து கொள்ள போவதில்லை. மனித உரிமை ஆர்வலராகவும் தொழிற்சங்கவாதியாகவுமே அதில் கலந்து கொள்வேன்.
மனித உரிமை ஆர்வலர்களுக்கும் தொழிற்சங்க தலைவர்களுக்கும் மட்டுமே மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும் என்பதால் நான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளேன்.
இதன் போது கூட்டத்தில் கலந்து கொள்ளும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளை சந்தித்து இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து புரிய வைத்து, அவர்களுக்கு தெளிவுப்படுத்துவேன்.
நாட்டுக்கு துரோகம் இழைக்கும் நோக்கில் நான் இதனை செய்யவில்லை. மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுப்பதற்காவே நான் இதனை செய்யப் போகிறேன்.
1988ம், 89ம் ஆண்டுகளின் வன்செயல் காலத்தில் மகிந்த ராஜபக்சவும் வாசுதேவ நாணயக்காரவும் இவ்வாறான செயற்பாடுகளையே முன்னெடுத்தனர் என்றார்.