பக்கங்கள்

பக்கங்கள்

20 நவ., 2013

படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை! ஆனந்த சங்கரி
இராணுவப் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்டப் போரின் பொது தமிழீழ விடுதலைப் புலிகளே குற்றச் செயல்களில் ஈடுபட்டனர்.
எனவே, போர்க் குற்றச் செயல்களில் புலிகள் ஈடுபட்டார்களா என்பது குறித்தே டேவிட் கமரூன் விசாரணை நடத்த வேண்டும்.
புலிகளுக்கும் அவர்களுக்கு ஆதரவளித்த தமிழ் அரசியல் கட்சிகளுக்கு எதிராகவுமே விசாரணை நடத்தப்பட வேண்டும்.
கமரூனின் வடக்கு விஜயத்தின் போது புலிகளினால் பாதிக்கப்பட்ட தரப்பினரை சந்திக்கவில்லை.
புலிகளின் குற்றச்சாட்டுக்களை மட்டுமே கமரூன் அறிந்து கொண்டுள்ளார்.
இறுதிக் கட்ட போரின் போது புலிகள் மக்களை மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டனர் என ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.