பக்கங்கள்

பக்கங்கள்

16 நவ., 2013

புறக்கணிப்பு மூலம் மன்மோகன் சிங், மஹிந்தவுக்கு கடும் செய்தியை சொல்லியுள்ளார்!- சர்வதேச மன்னிப்புச்சபை
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணித்தமையின் மூலம், இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும கடும் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளதாக சர்வதேச மன்னிப்புசபை தெரிவித்துள்ளது.
எனினும் இறுதிப்போரின் போது இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் இந்தியா இன்னும் நேரடியான குற்றச்சாட்டுக்களை சுமத்தாமையானது கவலையளிப்பதாக சர்வதேச மன்னிப்பு சபையின் இந்திய சிரேஸ்ட நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜி. ஆனந்தபத்மநாபன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்றும் அனந்த பத்மநாபன் கோரியுள்ளார்.
இலங்கையில் சர்வதிகார ஆட்சி ஒன்று முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.