பக்கங்கள்

பக்கங்கள்

13 நவ., 2013

இலங்கையில் கண்ட தோல்வியை பான் கீ மூன் மீண்டும் நினைவு கூர்ந்தார்
இலங்கையின் இறுதிப்போரின் போது ஐக்கிய நாடுகள் சபை தமது கடமையில் இருந்து தோல்வி கண்டமையை சபையின் செயலாளர் பான் கீ மூன் மீண்டும் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில் நேற்று உரையாற்றிய அவர், 2012 ம் ஆண்டின், தமது உள்ளக நடவடிக்கைகள் தொடர்பான மதிப்பீட்டின்படி இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபை முற்றாக தோல்வி கண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
எனவே ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகளில் முன்னேற்;றங்களை கொண்டு வரவேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில் சிரேஸ்ட நிலை பார்க்காமல் ஐக்கிய நாடுகளின் அனைத்து உறுப்பினர்களும் மனித உரிமை காப்பு விடயத்திலும் அவற்றை பலப்படுத்தும் விடயத்திலும் பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று பான் கீ மூன் கேட்டுக்கொண்டார்.