பக்கங்கள்

பக்கங்கள்

26 நவ., 2013

மாவீரர்களுக்கு கரவெட்டி பிரதேச சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது! அஞ்சலி செலுத்திய விஜேநேசன் கைது
மாவீரர்களுக்கான அஞ்சலி கரவெட்டி பிரதேச சபையில் இன்று திங்கட்கிழமை செலுத்தப்பட்டுள்ளது.அனைத்துலக பெண்கள் கொடுமை தினமான இன்று அதனை அனுஷ்டிப்பதற்கான நிகழ்வு பிரதேச சபை தவிசாளர் சு.வியாகேசு தலைமையில் கரவெட்டி பிரதேச சபை
மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது படுகொலை செய்யப்பட்ட விடுதலை புலிகளின் தொலைக்காட்சி அறிவிப்பாளர் இசைப்பிரியா மற்றும் விடுதலை புலிகளின் போராளிகளாகவிருந்து உயிர் நீர்த்த மாவீரர்களுக்காக பிரதேச சபை உறுப்பினர் ஆள்வாப்பிள்ளை மதியரசன் தீபமேற்றி பூப்போட்டு அஞ்சலி செலுத்தினார்.
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய விஜேநேசன் கைது.
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய விஜேநேசன் கைது . இன்று கரவெட்டி பிரதேச சபையில் நாட்டிற்காய் உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூரும் முகமாக அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர் பிரதேச சபை உறுப்பினர்களில் ஒருவரான விஜேநேசன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் .