பக்கங்கள்

பக்கங்கள்

9 நவ., 2013

இலங்கையின் முதலாவது கணனி உற்பத்தி தொழிற்சாலை ஜனாதிபதியால் திறந்து வைப்பு
அம்பாந்தோட்டை சூரிய வெவ என்ற இடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது கணனி உற்பத்தி தொழிற்சாலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை திறந்து வைத்தார்.
ஆசியாவின் தெழில்நுட்ப மத்திய நிலையமாக இலங்கையை மாற்றும் தேசிய திட்டத்தின்கீழ் ”ஈ விஸ்” என்ற பெயரில் இந்த கணனி
உற்பத்தித் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
“எமக்கு எம்முடைய கணினி” என்ற தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதியின் யோசனையின் பிரகாரம் சர்வதேச தரம் கொண்ட வகையில் இந்த நிறுவனம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.