பக்கங்கள்

பக்கங்கள்

6 நவ., 2013

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை! இலத்திரனியல் முறையில் வாகனங்களுக்கான கட்டணம் அறவீடு
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்களை இலத்திரனியல் முறையில் அறவிடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் முதல் முறையாக இந்த இலத்திரனியல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என அதிவேக வீதி செயல் திட்டத்தின் பணிப்பாளர் எம்.பி.கே.எல். குணரட்ன தெரிவித்தார்.
முன் செலுத்தல் முறையில் இலத்திரனியல் அட்டைகள் வழங்கப்படுவதுடன், நுழைவாயிலில் உள்ள கருவியில் மேல் அதனை வைத்ததும் குறிப்பிட்ட கட்டணம் தானாகவே அறவிடப்பட்டு விடும்.
4 நுழைவுச் சந்திகளை கொண்ட கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதி 26 கிலோ மீற்றர் தூரத்தை கொண்டது.
களனி பாலம், பேலியகொடெ மீன்சந்தை, ஜா-எல, கட்டுநாயக்க ஆகிய இடங்களில் இந்தச் சந்திகள் காணப்படுகின்றன.
இந்த வீதியில் பயணிக்கும் வாகனங்கள் 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க வேண்டும்.
வீதியில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், ஒரு பிரத்தியேக கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவை கண்காணிக்கப்படுகின்றன.