பக்கங்கள்

பக்கங்கள்

15 நவ., 2013

மெக்ரேயை மங்கள சந்தித்தமையானது டி.எஸ்.சேனநாயக்கவின் கன்னத்தில் அறைந்ததுக்கு சமம்: அரசாங்கம்

இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக பிரசாரம் செய்யும் கெலும் மெக்ரேயை ஐ.தே.கட்சி எம்.பி மங்கள சமரவீர அக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் சந்தித்தமையானது தேசப்பற்று கொண்ட டி.எஸ்.சேனநாயக்கவின் 'கன்னத்தில் அறையும்" செயலாகும் எனத் தெரிவிக்கும் அரசாங்கம் மெக்ரே தனது வரையறையை மீறி செயற்பட்டால் அச்சந்தர்ப்பத்தில் அரசாங்கம் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமென்றும் அரசு அறிவித்தது.
கிருலப்பனையில் உள்ள தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று புதன்கிழமை அவசரமாக இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்தார். 
அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மின்சார நாற்காலியில் உட்கார வைக்க வேண்டுமென்றும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுக் கூட்டங்கள் நடைபெறும் போதும் வேறு முக்கியமான மாநாடுகள் நடைபெறும் போதும் இலங்கைக்கு எதிராக சோடிக்கப்பட்ட கதைகளை தயாரித்து அதனை செனல் -4 தொலைக்காட்சியில் செய்திகளாக ஒளிபரப்புச் செய்பவரே கெலும் மெக்ரே ஆவார்.
 
அத்தோடு வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் புலி ஆதரவாளர்களின் 'சம்பளப் பட்டியலிலும்" மெக்ரேயின் பெயர் உள்ளது.