பக்கங்கள்

பக்கங்கள்

21 நவ., 2013

நீண்ட இடைவெளிக்குப் பின் பாண்டியராஜ் படத்தில் சிம்புவும் நயன் தாரா இணைகிறார்கள் என்ற செய்தி தற்போது வெளியாகிவருகிறது
சிம்புவும் நயன் தாராவும் கடைசியாக வல்லவன் படத்தில் ஒன்றாக நடித்தனர். அதன்பிறகு இருவரும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து தனித்தனியாக நடித்தனர். இருவரும் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்ததாக இணையத்தில் புகைப்படம் வெளியாகி பெரும்
பரபரப்பாகியது. இந்த புகைப்படங்களை சிம்புவே விளம்பரத்திற்காக வெளியே லீக் செய்தது தெரியவந்ததால் நயன் தாரா, டென்ஷனாகி, சிம்புவுடன் தன் நட்பை துண்டித்தார். இதன் பிறகு பல வருடங்களாக சிம்புவுடன் அவருக்கு எவ்வித தொடர்பும் இல்லை. சில நடிகர்கள் இருவரையும் சேர்த்து வைக்க செய்த முயற்சிகளும் வீணாகின.

நீண்ட இடைவெளிக்குப் பின் பாண்டியராஜ் படத்தில் சிம்புவும் நயன் தாரா இணைகிறார்கள் என்ற செய்தி தற்போது வெளியாகிவருகிறது. சிம்புவை முதன்முதலாக இயக்கும் பாண்டிராஜ், தன்னுடைய படத்தில் பரபரப்பான ஹீரோயின் இருந்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்தபோது, சிம்புதான் நயன் தாராவை பரிந்துரை செய்தார். ஆனால் நயன் தாரா இதற்கு ஒப்புக்கொள்வாரோ என்ற சந்தேகத்துடன் அவரை அணுகிய பாண்டிராஜ், கதையை கேட்டதும் நீண்ட நேரம் யோசனை செய்து ஓகே சொல்லிவிட்டார். இதனால் சிம்புவுடன் நயன் தாரா இணைவது உறுதியாகிவிட்டது. இதன் முறையான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும்.
இந்த படத்தின் கதைப்படி சிம்புவுக்கும் நயன் தாராவுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பின் இருவருக்கும் சின்னச்சின்ன கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து பின்னர் ஒரு கட்டத்தில் மீண்டும் உணர்ச்சிமயமாக இணைகின்றனர். இந்த கதையை தன்னுடைய பாணியில் சொல்லப்போகிறாராம் பாண்டிராஜ்.

இந்த விஷயம் கேள்விப்பட்டு ஹன்சிகா பயங்கர டென்ஷனாகிவிட்டாராம். நயன் தாராவுடன் நடித்தால் தன் காதலுக்கு மோசம் வந்துவிடும் என்று பயந்த ஹன்சிகா, சிம்புவுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளார். ஆனால் சிம்பு அவருடைய கட்டுப்பாட்டை காதில் போட்டுக்கொள்ளவே இல்லையாம். மீண்டும் நயன் தாராவுடன் இணைவதற்கு சந்தோஷமாக இருக்கிறார் என்பதுதான் தற்போதைய கோலிவுட் ஹாட் டாக்.