பக்கங்கள்

பக்கங்கள்

29 நவ., 2013

வெளிநாடுகளில் இலங்கைக்கு எதிரானவர்களின் தகவல்கள் திரட்ட புதிய புலனாய்வுப் பிரிவு
இலங்கை அரசாங்கம் அரச புலனாய்வு சேவை (எஸ்.ஐ.எஸ்.) மற்றும் இராணுவ புலனாய்வு சேவை ஆகியவற்றில் இருந்து தெரிவு செய்த புலனாய்வாளர்களை கொண்ட புதிய புலனாய்வுப் பிரிவை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புலனாய்வு மற்றும் தகவல்களுக்கான சர்வதேச பணியகம் என இந்த புலனாய்வுப் பிரிவுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
இந்த பணியகத்தை சேர்ந்த அதிகாரிகள் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரங்களில் பணிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
அந்நாடுகளில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் நபர்களின் தகவல்களை திரட்டும் பொறுப்பு இந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக அவுஸ்திரேலியா, மலேசியா, பிரித்தானியா, கனடா, அமெரிக்கா, இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் உள்ள தூதரகங்களுக்கு தலா 6 பேர் கொண்ட புலனாய்வாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.