பக்கங்கள்

பக்கங்கள்

14 நவ., 2013

இலங்கையின் மாநாட்டில் குறைந்த எண்ணிக்கை தலைவர்கள்!- கனடா மகிழ்ச்சி
இலங்கையின் பொதுநலவாய நாடுகள் அமர்வுக்கு ஆகக்குறைந்த தலைவர்களே பங்கேற்பது குறித்து கனடா மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. 
இந்த மாநாட்டில் பொதுநலவாயத்தின் அரைவாசி தலைவர்கள் பங்கேற்கவில்லை என்று கனேடிய வெளியுறவு அமைச்சர்; ஜோன் பேய்ர்ட் குறிப்பிடடுள்ளார்.
நாளை ஆரம்பமாகவுள்ள இந்த மாநாட்டில் 53 நாடுகளின் தலைவர்களில் 23 அரச தலைவர்களே இந்த மாநாட்டில் பங்கேற்கி;ன்றனர்.
இந்தநிலையில் இந்திய பிரதமர், மொரிசியஸ் பிரதமர் ஆகியோரின் தீர்மானங்களை தாம் வரவேற்பதாக பேய்ர்ட் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தாம் மேற்கொண்டுள்ள மனித உரிமைமீறல் நடவடிக்கைகளை பொதுநலவாய மாநாட்டின் மூலம் மறைத்து வெள்ளையடித்துக் கொள்ளும் என்ற காரணத்தினாலேயே கனேடிய பிரதமர் அதில் பங்கேற்கவில்லை என்று பேய்ர்ட் குறிப்பிட்டுள்ளார்.