பக்கங்கள்

பக்கங்கள்

16 நவ., 2013

பிரி. பிரதமர் வருகையை எதிர்த்து சிங்களவர்கள் சுன்னாகத்தில் போராட்டம்!- மாவிட்டபுரம் போராட்ட மக்களை சந்திக்காமல் பிரதமர் கொழும்பு திரும்பினார்
சுன்னாகம் பகுதியில் சிங்கள மக்களால் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமிற்கு வருகை தந்த பிரிட்டிஷ் பிரதமர் அந்த நிகழ்வுடன் மீளவும் கொழும்பு திரும்பியுள்ளார்.
வலிகாமம் வடக்கில் தமிழர்களுக்கு வாழும் உரிமை மறுக்கப்பட்டிருப்பதை பிரிட்டிஷ் பிரதமருக்கு வெளிப்படுத்துவதற்காக காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன், வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
படையினரின் ஏற்பாட்டில் சிங்கள மக்களால் யாழ்.சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டமே பிரிட்டிஷ் பிரதமர் வராமைக்கான காரணம் என மக்கள் விசனமடைந்துள்ளனர்.
யாழ்.வருகை தந்திருந்த பிரிட்டிஷ் பிரதமர் வலிகாமம் வடக்கு மக்களால் நடத்தப்பட்ட போராட்டத்திலும் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாலை 6.00மணி வரையில் மக்கள் காத்திருந்தனர்.
அதற்குள் சுன்னாகம் பகுதியில் சிங்கள மக்களால் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது.
இதனால் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமிற்கு வருகை தந்த பிரிட்டிஷ் பிரதமர் அந்த நிகழ்வுடன் மீளவும் கொழும்பு திரும்பியுள்ளார்.
மேலும் சபாபதிப்பிள்ளை முகாம் தலைவர் மற்றும் முக்கிய உறுப்பினர்களை நேற்று படையினர் சந்தித்து மதுபான விருந்து கொடுத்துள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனினும் சகலவற்றையும் தாண்டி மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் மாவிட்டபுரம்- கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் அவர் கலந்து கொள்ளாமையினால் மக்கள் பெரும் ஏமாற்றமடைந்ததுடன், சில மக்கள் அழுதும் உள்ளனர்.
முன்னதாக இன்று காலை யாழ்.மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் மாவிட்டபுரம் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த மக்களுக்கு படைப்புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன், 3 வாகனங்கள் மீது கல்வீச்சு தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனாலும் எதிர்ப்புக்களை மீறி சுமார் 1500ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.