பக்கங்கள்

பக்கங்கள்

24 நவ., 2013

ஈழத்தமிழ் அகதிகளுக்கு குடியுரிமையை பெற்றுக்கொடுக்க சகல கட்சிகளும் இணைய வேண்டும்: சுதர்சன நாச்சியப்பன்
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை பெற்றுக்கொடுக்க தமிழக கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் என இந்திய மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.
மதுரையில் நடைபெற்ற அகில இந்திய மனித உரிமைகள் பேரவையின் 121-வது செயற்குழு மற்றும் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட சுதர்சன நாச்சியப்பன் செய்தியாளர்களிடம் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைப் பிரச்சினையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து உண்டு. அந்த அடிப்படையிலே தி.மு.க.வின் கருத்தும் இருக்கிறது.
பிரிட்டிஷ் பிரதமர் கமரூன் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்காக இலங்கை சென்று, அங்கு தமிழர்களைச் சந்தித்தார்.
இதனால், இங்கிலாந்திலுள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரு படுக்கை அறையுள்ள வீடும், 1,000 பவுண் நிதியுதவியும், குடியுரிமையும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ஆகவே, தமிழகத்தில் உள்ள இரண்டரை லட்சம் தமிழ் அகதிகளுக்கும் குடியுரிமையை மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தரும் வகையில் தமிழக கட்சிகள் ஒன்றிணைந்து, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைக்கு துணை நிற்க வேண்டும் என்றார்.