பக்கங்கள்

பக்கங்கள்

16 நவ., 2013

வேடிக்கையான பேச்சாக இருக்கிறது இளவரசர் சார்ள்ஸின் பொறுப்பற்ற பேச்சு. "உலகில் உள்ள பிரச்சினைகளை நினைவுபடுத்திக்கொண்டிருக்க தேவையில்லை எனவும் மாறாக அவற்றுக்கு தீர்வினை பெற பொதுநலவாய அமைப்பு முயற்சிக்க வேண்டும்" எனவும் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் தெரிவித்துள்ளமையானது ஆழமற்ற சிந்தனையாகவே தோன்றுகின்றது. நினைவுபடுத்தாமல் எப்படி தீர்வு தேடுவீர்கள் இளவரசரே? தீர்வைப்பற்றி நீங்கள் முன்வைக்கும் போதே எதற்கான தீர்வு என்று சொல்ல வேண்டும் அல்லவா? அத்தோடு உங்கள் மனசாட்சிக்கே தெரிகிறது இங்கே மருந்து தேவைப்படும் காயங்கள் இருக்கின்றன என்று அதனால் தான் தீர்வு பற்றி மேலோட்டமாக சொல்கிறீர்கள்! கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை. வலி சுமந்த மனிதர்களுக்கு தான் தெரியும் வலி என்றால் என்ன என்று...இல்லையேல் நெஞ்சில் துளியாகவேனும் ஈரம் இருக்க வேண்டும்...உங்களுக்கு எங்கே புரியும் எம் இனத்தின் கொடும் துயரம் பற்றி?
http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tamilcnn.org%2Farchives%2F217234.html&h=TAQEnycAX