பக்கங்கள்

பக்கங்கள்

2 நவ., 2013

அதிமுக இணையதளம் சிதைப்பு

அதிமுகவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.aiadmkallindia.org  இதனுள் அத்துமீறிய பாகிஸ்தான் இணையதள தாக்காளர்கள் ஒரு மண்டை ஓட்டின் படத்தை வைத்துவிட்டு அதில் பாகிஸ்தான் கொடியை பறக்கும்படி டிசைன் செய்துள்ளனர்.

அதில், இஸ்லாம் ஜிந்தாபாத், இஸ்லாமியர்கள் வாழ்க, பாகிஸ்தான் ஜிந்தாபாத் போன்ற வாசகங்களைப் பதிந்துவிட்டு, இதை ஹேக் செய்தது "HACKED BY H4$N4!N H4XOR" என்று குறிப்பிட்டுள்ள அவர்கள் தங்களுக்கு நீதியும் அமைதியும் வேண்டும் என்று அதிமுகவின் வலைத்தளத்தில் குறிப்பிட்டு, Hasnain1337@gmail.com என்ற இ-மெயில் ஐடியை பதிவு செய்துள்ளனர்.

இந்த இணையதள தாக்குதலுக்குப் பிறகு, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தற்காலிகமாக அதன் செயல்பாடுகள் நிறுத்தி நிறுத்தப்பட்டது.