பக்கங்கள்

பக்கங்கள்

14 டிச., 2013

சுவிசில் கழகமொன்றின் 13 வயது பிரிவின் ஐஸ்கொக்கி ( U13 Ice-Hockey )அணியில் முதல் தமிழ் சிறுவன்

சுவிசில் U13 Ice-Hockey-ல் Jura தேசிய மாநில கழகத்தில் தெரிவாகிய முதல் தமிழ் சிறுவன் என்ற பெருமையை பெற்றுள்ளார் அஸ்வின் சிவசுப்பிரமணியம்(வயது 12).
இவர் தனது 6 வயதில் HC Delemont Vallee Ice-Hockey கழகத்தில் இணைந்து பந்து காப்பாளராக விளையாடி வருகின்றார்.

இவரின் திறமையை கண்ட பயிற்றுனர்கள் U13 Jura தேசிய மாநில அளவில் அஸ்வினை விளையாட செய்துள்ளனர்.
அத்துடன் கோடை காலத்தில் சுவிசின் முன்னணி கழகமான SHC Rossemaison Inline Hockey கழகத்தில் 5 வருடங்களாக அஸ்வின் பந்துகாப்பாளராக விளையாடி வருகின்றார்.
Mini பிரிவில் 2012- Zurich, 2013-Oensingen, சுவிசில் Champion கிண்ணத்தையும் 2012- Gievisiz (Fribourg) ஐரோப்பிய கிண்ணத்துக்கான போட்டியில் 5வது இடத்தையும் பெற்றுள்ளார்கள்.
2012- Zurich சுவிஸ் Champion கிண்ணத்துக்கான போட்டியில் அஸ்வின் சிறந்த பந்துகாப்பாளர் பட்டத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.