- இன்று 13.12.2013 வெள்ளிக்கிழமை ஊர்காவற்றுறை பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மண்டைதீவு சந்திப்பகுதியில் கடற்படையினரால் சுமார் அரை மணிநேரம்தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார். மு.ப 10 மணியளவில் ஊர்காவற்றுறை நோக்கிச்சென்றுகொண்டிருந்த மாகாணசபை உறுப்பினரின் வாகனத்தை மண்டைதீவுச்சந்திப்பகுதியில் தடுத்து நிறுத்திய கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டனர். தான் மாகாணசபை உறுப்பினர் என அடையாளம் காட்டிய போதும், உங்களின் வாகன இலக்கம் எங்களுக்கு அறிவிக்கப்பட்டு, தடுத்து வைக்குமாறு எங்களுக்கு மேலிட உத்தரவு வந்துள்ளது. மேலிட உத்தரவு வந்த பின்பே உங்களை மேற்கொண்டு செல்ல அனுமதிக்க முடியும் என சுமார் அரை மணிநேரம தடுத்து வைக்கப்படு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அங்கு கடமையில் இருந்த 72106 இலக்கமுடைய பொலிஸ் உத்தியோகத்தரை என்ன காரணத்திற்காக விசாரணை? என வினவியபோதும், தனக்கு எதுவுமே தெரியாது, கடற்படையினரே சகலவற்றுக்கும் பொறுப்பு என பதிலளித்துள்ளார். இதன்பின்பு சுமார் அரை மணிநேரம் கழித்தே அவர்கள் மேற்கொண்டு பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். இதானல் ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிக்கு நேரம் பிந்தியே செல்ல முடிந்துள்ளது.
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼