பக்கங்கள்

பக்கங்கள்

17 டிச., 2013

அப்பாவை கொன்று, அம்மாவை கேவலப்படுத்தி எங்கள் வாழ்க்கையை நாசமாக்கி விட்டார்கள்! றெக்சியனின் மகள்
எங்கள் அம்மாவுக்கும் கமலுக்கும் தொடர்பு என்றுகூறி எங்கள் வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டார்கள் என்று கோபத்தில் கொந்தளிக்கிறார் றெக்‌சியனின் 16 வயது மகள்.
தற்போது ஜி.சீ.ஈ. சாதாரணதரப் பரீட்சை எழுதி வரும் றெக்சியனின் மகள் தொடர்ந்து கூறியதாவது,
அப்பாவைக் கொன்றது மட்டுமல்லாமல் அம்மாவையும் கேவலப்படுத்தி எங்கள் வாழ்க்கையை எதிர்காலத்தையே நாசப்படுத்திவிட்டார்கள்.
கட்சியை விட்டு விலகச் சொல்லி அவர்கள் அப்பாவைக் கட்டாயப்படுத்திய போது கூட்டமைப்பில் போய் சேருங்கள் என்று அவரிடம் சொன்னோம். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
அப்படிச் செய்தால் கொன்று விடுவார்கள் என்று சொன்னார். அதே நேரம் இருந்தாலும் கொன்றுவிடுவார்கள் என்றும் சொல்லியிருக்கிறார்.
அப்போது அதன் பாரதூரம் எனக்குப் புரியவில்லை. இப்போதுதான் அதன் அர்த்தம் புரிகிறது என்றார் அவர்.