பக்கங்கள்

பக்கங்கள்

16 டிச., 2013

பொன் கலசமொன்றை 35 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்றவர்கள் கைது

கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற ஓய்வு பெற்ற இராணுவ லெப்டினல் கேர்ணலொருவரையும் பிறிதொரு நபரையும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 
பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று வத்தளை  பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்களைக் கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
 
கைது செய்யப்பட்டவர்கள் இன்று வத்தளை நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் அதனை தொடர்ந்து அவர்கள் எதிர்வரும் இம்மாதம் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
 
கைது செய்யப்பட்டவர்களில் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ லெப்டினல் கேர்ணல் தர வீரர் ஒருவரும் அடங்குவதாக சுட்டிக்காட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பவம் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவும் தொல் பொருள் பாதுகாப்பு விசாரணை பிரிவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தார்.