பக்கங்கள்

பக்கங்கள்

4 டிச., 2013

இராணுவத்தில் இணைந்துள்ள தமிழ்ப் பெண்கள் தென் பகுதிக்கு விஜயம்
இலங்கை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட 45 தமிழ்ப் பெண்கள் தென் பகுதிக்கு சுற்றுலா விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இராணுவத்தில் இணைத்து கொள்ளப்பட்ட தமிழ்ப் பெண்களின் தெற்கிற்கான இந்த பயணத்தை வன்னி இராணுவத் தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது.
வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான நட்புறவு தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த பெண்களை தென் பகுதிக்கு சுற்றுலாவுக்காக அனுப்பி வைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இந்த பெண்கள் தமது வாழ்நாளில் கண்டிராத தென் பகுதி நகரங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கதிர்காமம், திஸ்ஸமஹாராம, மகாகம்புற சர்வதேச மாநாட்டு மண்டபம், மகிந்த ராஜபக்ச துறைமுகம், மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் உட்பட முக்கிய இடங்களுக்கு இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அரசாங்கம் முன்னெடுத்துள்ள நல்லிணக்க செயற்பாடுகளின் ஒரு அங்கமாக இராணுவத்தில் இணைந்துள்ள தமிழ் பெண்களின் இந்த தெற்கு விஜயம் அமைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் கூறியுள்ளது.