பக்கங்கள்

பக்கங்கள்

8 டிச., 2013

ஏற்காடு: 78 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி
 


சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 4ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எ
ண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் அதிமுக முன்னிலையில் இருந்தது

மொத்தம் 21 சுற்றுகள் கொண்ட இந்த வாக்கு எண்ணிக்கையில், 1,42,771 ஓட்டுகள் பெற்று அதிமுக வேட்பாளர் சரோஜா வெற்றி பெற்றார். 64,657 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் மாறன் தோல்வியை சந்தித்தார். நோட்டோவுக்கு ஏற்காடு இடைத்தேர்த-ல் 4,431 வாக்குகள் பதிவாகி உள்ளன.

78,116 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது.