பக்கங்கள்

பக்கங்கள்

13 டிச., 2013

வரவு-செலவுத் திட்டங்கள் தோல்வி: 8 உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் பதவி இழப்பு
2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டங்கள் தோல்வியடைந்ததன் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டில் இருக்கும் 8 உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் பதவிகளை இழந்துள்ளனர்.
கெஸ்பேவ நகர சபை, மாத்தறை பிரதேச சபை, மதவாச்சி பிரதேச சபைகளின் வரவு செலவுத் திட்டங்கள் இன்று இரண்டாவது தடையும் தோல்வியடைந்தன.
கெஸ்பேவ நகர சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டு மேலதிக வாக்குகளினால் தோல்வியடைந்தது. எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
மாத்தறை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் மூன்று மேலதிக வாக்குகளினால் தோல்வியடைந்தது. அந்த பிரதேச சபையின் உப தலைவர் உட்பட ஆளும் கட்சியின் எதிர்க்கட்சியினருடன் இணைந்து திட்டத்தை தோற்கடித்தனர்.
அதேவேளை மதவாச்சி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டமும் மூன்று மேலதிக வாக்குகளினால் தோற்டிக்கப்பட்டது. திட்டத்திற்கு ஆதரவாக மூன்று வாக்குகள் மட்டுமே அளிக்கப்பட்டது.
இந்த உள்ளூராட்சி சபைகளின் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ள நிலையில் ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் 15 உள்ளூராட்சி சபைகளின் வரவு செலவுத் திட்டங்கள் இதுவரை தோல்வியடைந்துள்ளன.