பக்கங்கள்

பக்கங்கள்

6 டிச., 2013

நெல்சன் மண்டேலா காலமானார்
தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா (95)  ஜோஹனஸ்பெர்க்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அமைதியாக இறந்தார் என்று தற்போதைய ஜனாதி பதிஜேக்கப் ஸூமா அறிவித்துள்ளார்.
அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது இல்லத்தில் சூழ்ந்திருக்கையில் அவரது உயிர் பிரிந்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அவரது மகள் மகஸிவே மண்டேலா, நெல்சன் மண்டேலா அவரது மரணப்படுக்கையில் மிகவும் தைரியமான ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் என்று கூறியிருந்தார்.
மண்டேலா மருத்துவமனையில் இருந்து செப்டம்பர் மாதம் வீடு திரும்பியதிலிருந்து ,அவரது இல்லத்திலேயே மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.