பக்கங்கள்

பக்கங்கள்

16 டிச., 2013

இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலைமை பரிதாபத்துக்குரியதாகவே உள்ளது!- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலைமையும் பரிதாபத்துக்குரியதாகவே உள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளும் கிடைக்க எங்கள் வாழும் கலை இயக்கம் இயன்றதை செய்யும். இவ்வாறு  வாழும் கலை மையத்தின் நிறுவனரும் ஆன்மிகவாதியுமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இன்று தெரிவித்துள்ளார்.
வாழும் கலை மையத்தின் நிறுவனரும் ஆன்மிகவாதியுமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் இலங்கை தமிழர் முகாமுக்கு இன்று சென்றார்.
அங்கு தங்கியுள்ள மக்களை சந்தித்த அவர், அவர்களின் துயரங்களை கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியதாவது:-
இலங்கை தமிழர்களை இதுபோல் நீண்ட காலமாக அகதிகளாக முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் மத்திய அரசு, ஒன்று, அவர்களுக்கு இந்திய குடியுரிமையை வழங்க வேண்டும். அல்லது, அவர்கள் கௌரவமாக வாழ வழிவகை செய்து தர வேண்டும்.
இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலைமையும் பரிதாபத்துக்குரியதாகவே உள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளும் கிடைக்க எங்கள் வாழும் கலை இயக்கம் இயன்றதை செய்யும்.
இலங்கை கடலோர காவல்படையினர் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்து வரும் சம்பவங்களும் வன்மையாக கண்டிக்கத் தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, மண்டபம் முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு வேட்டி, சேலை, இனிப்பு மற்றும் உணவுப் பண்டங்களை வினியோகிக்க முயன்ற ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் அவரது சீடர்களை அவ்வாறு செய்ய விடாமல் பொலிஸார் தடுத்து விட்டனர் என தெரிவிக்கப்படுகிறது.