பக்கங்கள்

பக்கங்கள்

23 டிச., 2013


இளையராஜா மருத்துவமனையில் அனுமதி
 

இசையமைப்பாளர் இளையராஜா உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 



இன்று காலை வழக்கம்போல பிரசாத் ஸ்டுடியோவிற்கு வந்தார் இளையராஜா.   புதிய படத்திற்கான பாடல் இசையமைப்பில் ஈடுபட்டிருந்தார். அதன் பின்னர் டிசம்பர் 28ம் தேதி நடைபெற உள்ள விழாவிற்காக பாடல் கம்போசிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.


அப்போது அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.