பக்கங்கள்

பக்கங்கள்

10 டிச., 2013

தமிழக அமைச்சரவை மாற்றம்! ஆர்.பி.உதயகுமாருக்கு அமைச்சர் பதவி! கே.வி.ராமலிங்கம் பதவி பறிப்பு!
 
தமிழக விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.வி.ராமலிங்கம் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
தமிழக விளையாட்டு இளைஞர் நலத்துறை
அமைச்சராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான பதவியேற்பு நிகழ்ச்சி 11.12.2013 புதன்கிழமை ஆளுநர் மாளிகையில் காலை 9.45 மணிக்கு நடைபெறும்.


தமிழக அமைச்சரவையில் மூன்று பேருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பி.வி.ரமணாவுக்கு வருவாய்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. எம்.சி.சம்பத்துக்கு வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தோப்பு என்.டி.வெங்கடாசலத்துக்கு சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.