பக்கங்கள்

பக்கங்கள்

20 டிச., 2013

காங். ஆலோசனைக்கூட்டத்தில் தங்கபாலு கோஷ்டி வெளிநடப்பு தமிழக காங்கிரசுக்கு புதிய மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் சமீபத்தில் நியமிக்கப் பட்டனர். கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்க புதிய நிர்வாகிகள் அவசர கூட்டம் இன்று கூட்டப்பட்டது. சென்னை சத்திய மூர்த்தி பவனில்
காலை 10 மணிக்கு இக்கூட்டம் துவங்கியது. தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட தங்கபாலு ஆதரவாளர்கள் திடீரென எழுந்து கோஷம் போட்டனர். மத்திய மந்திரிகள், முன்னாள் காங்கிரஸ் தலைவர்களை அழைக்காமல் கூட்டம் நடத்துவதா என கண்டன குரல் எழுப்பினார்கள். சிறு குழுவை வைத்து கூட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் செல்லாது என கூச்சல் போட்டு ரகளையில் ஈடுபட்டனர்.
பிறகு கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்து விட்டு ஆர்.தாமோதரன், டி.எல். சிவலிங்கம், சுந்தர வடிவேலு, கணபதி உள்ளிட்ட தங்கபாலு ஆதரவாளர்கள் வெளியேறினர்.