பக்கங்கள்

பக்கங்கள்

3 டிச., 2013


பெண்ணொருவரை கொலை செய்த குற்றத்திற்காக பதுளை மேல் நீதிமன்றம் தேயிலை தோட்ட கங்காணியான தமிழர் ஒருவருக்கு இன்று மரணத் தண்டனை விதித்துள்ளது.
பதுளை வேவெஸ்ஸ தோட்டத்தை சேர்ந்த வேலு சிவ சந்திரபோஸ் என்பவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 06 ஆம் திகதி அதே தோட்டத்தை சேர்ந்த வேலுப்பிள்ளை செல்வகுமாரி என்ற பெண்ணை கொலை செய்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
கொலை செய்யப்பட்ட பெண் இவரது வைப்பாட்டி என நீதிமன்ற விசாரணைகளின் போது தெரியவந்தது.
வேலுசிவ சந்திரபோஸ் மீது சுமத்தப்பட்ட கொலை குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு மரணத் தண்டனை வழங்கி தீர்ப்பளிப்பதாக நீதிபதி சம்பத் பீ. அபயகோன் தெரிவித்தார்.