பக்கங்கள்

பக்கங்கள்

7 டிச., 2013

விதிமீறல் புகார்: ஜெ.,வுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை
ஏற்காடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் விதிமுறைகளை மீறிய தாக புகார் எழுந்தது. தேர்தல் நடத்தை விதியை மீறி ஏற்காடு தொகுதிக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்ததாக
தமிழ்நாடு தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் தி.மு.க. புகார் மனு அளித்தது.


இது தொடர்பாக விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு ஜெயலலிதா விளக்கம் அளித்திருந்தார். அதில், தேர்தல் விதியை மீறி எந்த வாக்குறுதிகளையும் அளிக்கவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த விளக்கத்தை ஏற்க தலைமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. மேலும், தேர்தல் பிரச்சாரத் தின்போது எச்சரிக்கையுடன் பேச வேண்டும் என ஜெயலலிதாவுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.