பக்கங்கள்

பக்கங்கள்

3 டிச., 2013

தொடர் தோல்வியை சந்திக்கும் பார்சிலோனா அணி

லயனல் மெஸி விளையாடாத நிலையில் பார்சிலோனா அணி தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியைச் சந்தித்துள்ளது.லா லிகா கால்பந்தாட்ட போட்டியொன்றில் அத்திலட்டிக் பில்பஃபாவோ அணி 1 – 0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை  வெற்றிகொண்டது.
2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் பார்சிலோனா அணி இவ்வாறு தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உபாதை காரணமாக இவ்வாண்டின் மீதமாகவுள்ள பருவகாலப் போட்டிகளில் லயனல் மெஸி விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லயனல் மெஸி விளையாடத நிலையில் கடந்த வாரம் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அஜெக்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பார்சிலோனா அணி தோல்வியடைந்திருந்தது.