பக்கங்கள்

பக்கங்கள்

3 டிச., 2013

ஏற்காடு இடைத்தேர்தல் : முதன் முதலில் ‘நோட்டா‘
ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த பெருமாள்(அ.தி.மு.க.) மரணம் அடைந்ததையொட்டி, அத் தொகுதிக்கு நாளை(புதன்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது. நாளை வாக்குப்பதிவு நடக்கும் நிலையில்  மாலை
5 மணியுடன் ஏற்காடு தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம் முடிவடைந்தது.


தமிழக தேர்தல் வரலாற்றில் ஏற்காடு இடைத்தேர்தலில் முதன் முதலாக, ‘மேற்கண்ட வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை‘ என்ற ‘நோட்டா‘ பொத்தான் இடம் பெறுகிறது. இது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கடைசி வேட்பாளருக்கு அடுத்தபடியாக அமைகிறது.


அதன்படி, ஏற்காடு தொகுதியில் 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர், எனவே, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 12–வது சின்னமாக, ‘மேற்கண்ட வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை‘ என்ற ‘நோட்டா‘ பொத்தான் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வருகிற 8–ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டு அன்று மதியத்திற்குள் முடிவு அறிவிக்கப் படுகிறது.