பக்கங்கள்

பக்கங்கள்

19 டிச., 2013

இறுதி யுத்தத்தில் பொதுமக்களின் இறப்பை குறைக்குமாறு அமெரிக்காவிடம் கோரிய கோத்தபாய
பொதுமக்கள் மற்றும் இராணுவம் விவகாரங்கள் மற்றும் தொடர்புகளை மேம்படுத்தி பொதுமக்களின் இறப்புகளை குறைக்கும் சட்ட அமுலாக்க உதவியை பாதுாகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்காவிடம் கோரியதாக
விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசாங்கம் பொதுமக்களின் இறப்புகளை குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பிலிப்பைன்ஸில் உள்ள அமெரிக்க தூதரகம் வொஷிங்டனுக்கு அறிவித்துள்ளது.
2007 ஜூலை 31 ஆம் திகதி அமெரிக்க பிரதி செயலாளர் ஜோன் நெக்ரோபொன்ட் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இடையில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பான விபரங்கள் அடங்கிய இரகசிய இராஜதந்திர கேபிள் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.