பக்கங்கள்

பக்கங்கள்

6 டிச., 2013

வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் - ஜமமு தலைவர் மனோ கணேசன் சந்தித்து கலந்துரையாடல் 

வட மாகாணசபை முதல்வர் விக்கினேஸ்வரனும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனும் கொழும்பில் நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இக்கலந்துரையாடல் இடம்பெற்றதன் பின்னர், முன்னணியின் மக்கள் பிரதிநிதிகள், மரியாதை நிமித்தம் முதல்வர் விக்கினேஸ்வரனை சந்தித்தனர். 

இந்த மரியாதை நிமித்த சந்திப்பில் முன்னணியின் மேல்மாகாணசபை உறுப்பினர்கள் நல்லையா குமரகுருபரன், எஸ். ராஜேந்திரன், மத்திய மாகாணசபை உறுப்பினர் வேலு குமார், கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் வேலணை வேணியன், சண். குகவரதன், பிரியாணி குணரத்ன, கே.ரி. குருசாமி, எஸ். பாஸ்கரா, லோரன்ஸ் பெர்னாண்டோ ஆகியோர் இடம்பெற்றனர்.