பக்கங்கள்

பக்கங்கள்

8 டிச., 2013

ஆம் ஆத்மியின் சாதனை ஆச்சரியப்படுத்துகிறது: பெரிய கட்சிகளுக்கு எச்சரிக்கை: காங்கிரஸ் கருத்து
முதன் முறையாக டெல்லி சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கியுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிய வெற்றி கிடைத்துள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில் அக்கட்சி இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. 


இதுப்பற்றி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ஜனார்தனன் திவேதி கூறுகையில், முதல் தேர்தலிலேயே ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி மற்ற பெரிய கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும் சட்டசபை தேர்தல் ராகுலுக்கும், மோடிக்கும் இடையேயான போட்டி கிடையாது என்று கூறியுள்ளார். 
காங்கிரஸ் கட்சியின் பொதுச்யெலாளரான ஷகீல் அகமது, தங்களது கட்சி ஒருபோதும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிக்காது என்று கூறியுள்ளார். 
மத்திய அமைச்சர் சச்சின் பைலட் கூறியதாவது, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது, காங்கிரசுக்கு சாதகமான சூழ்நிலை இல்லை என்பது தெளிவாகி உள்ளது. மேலும், ஆம் ஆத்மியின் சாதனை ஆச்சரியப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.